search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகேலா ஜெயவர்தனே"

    ஆசிய கிரிக்கெட் அணிகளில் இந்தியாதான் மிகவும் பேலன்ஸ் கொண்ட அணி என்று இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்றது. இதில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது.

    இலங்கை அணி தொடக்க சுற்றோடு வெளியேறிய நிலையில் பாகிஸ்தான், அப்கானிஸ்தான் ‘சூப்பர் 4’ சுற்றோடு வெளியேறியது. ஆசிய அணிகளில் இந்தியாதான் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் பேலன்ஸ் கொண்ட அணி என இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனும் ஆன மகேலா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில் ‘‘இந்திய ஆசிய கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது. அவர்களின் வெளிப்பாடு கேப்பையை வெல்ல தகுதியுடையதாக இருந்தது. ஆனால், நாம் எதிர்பார்த்ததை விட ஏராளமான போட்டிகள் மிகவும் நெருக்கமாக வந்து பரபரப்பு ஏற்படுத்தின.

    வங்காள தேச அணி தமிம் இக்பால் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகிய இரண்டு முக்கியமான வீரர்கள் இல்லாமல் விளையாடியது. அவர்கள் வங்காள தேசத்திற்கு தலை நிமிர்ந்து செல்ல முடியும். எனினும், நல்ல தொடக்க கிடைத்தும் வெற்றி பெற முடியாமல் போனதே என்ற பெரிய ஏமாற்றம் அவர்களுக்கு இருக்கும்.



    வங்காள தேசம் 260 ரன்களுக்கும் மேல் அடித்திருக்க வேண்டும். ஆனால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். அதை இந்திய அணி பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

    மிக்க மகிழ்ச்சியோடு இந்தியா சொந்த நாடு திரும்பும். புதிய வீரர்கள் மற்றும் புதிய கம்பினேசன்களை இந்த தொடர் செய்து பார்த்தார்கள். ஆனால் உலகக்கோப்பைக்கு அவர்கள் தயார் ஆகி வருவதை காட்டியது. ஆசிய கிரிக்கெட் அணிகளில் இந்தியாதான் மிகவும் பேலன்ஸ் கொண்ட அணி ’’ என்றார்.
    இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோசகர் பதவி தனக்கு வேண்டாம் என அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மறுத்துள்ளார். #SriLankacricket #MahelaJayawardene #MuttiahMuralitharan #consultantrole

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியின் ஆட்டம் நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. இதையடுத்து அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை ஆலோசகர்களாக நியமிக்கலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. முரளிதரன், ஜெயவர்தனே, குமார் சங்கக்காரா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு கமிட்டி அமைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணி தேர்வுக்குழு முதலில் மகேலா ஜெயவர்தனேவை அணுகியது. ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து முத்தையா முரளிதரனை அணுகியது. ஆனால் இதற்கு ஒத்துழைப்பு தர அவரும் மறுத்துவிட்டார்.

    தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் இலங்கை ஏற்கனவே கடந்த வாரம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது.



    இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இந்த ஆலோசனைக் குழு முடிவு குறித்து முரளிதரன் கூறுகையில், ‘இந்த அழைப்பு நேர்மையற்றது, சூழ்ச்சி நிரம்பியது கிரிக்கெட் நிர்வாகம் கேவலமான ஒரு நிலையில் இருக்கும் போது எங்களைப் பயன்படுத்தப்பார்க்கிறது’, என கூறினார்.

    இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில், ‘இந்த சிஸ்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நேரத்தை வீணடிக்க வேண்டாம், எங்களைப் பயன்படுத்த வேண்டாம்” என கூறியுள்ளார். #SriLankacricket #MahelaJayawardene #MuttiahMuralitharan #consultantrole
    ×